• Latest News

    April 24, 2020

    நிந்தவூர் பொதுச் சுகாதார அதிகாரியின் எச்சரிக்கை. மீறினால் கடும் நடவடிக்கை

    எம்.சஹாப்தீன் -
    ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சூழலில் பொது மக்கள் சமூக இடைவிலகலை முறையாக பின்பற்றுமாறு நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி பஸீர் தஸ்னிமா பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றாது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.
    குறிப்பாக நிந்தவூர் பிரதேசத்தில்  கடற்கரையில் மீனவர்களே இதில் அசமந்தமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறும்இ சமூக இடைவிலகலை பின்பற்றி நடக்குமாறும் மீனவர்களுக்கு நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்தியரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    மேலும் மீனவர்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதக உத்தியோகத்தர்களினாலும், சம்மாந்துறை பொலிஸாரினாலும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக சமூக இடைவெளியை பேண வேண்டியதன் அவசியத்தையும், மீறும் போது ஏற்படும் விபரிதத்தையும் எடுத்துக் காட்டி விளக்கம் அளிக்கப்பட்டன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பொதுச் சுகாதார அதிகாரியின் எச்சரிக்கை. மீறினால் கடும் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top