பாறூக் –
கொரோனா தொற்று ஆபத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் செயற்திட்டத்திற்கு அமைவாக நேற்று நிந்தவூரில் உள்ள அரச மற்றும் தனியார் காரியாலயங்களில் கிருமி தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று ஆபத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் செயற்திட்டத்திற்கு அமைவாக நேற்று நிந்தவூரில் உள்ள அரச மற்றும் தனியார் காரியாலயங்களில் கிருமி தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டது.
கொரோனா (கொவிட் 19) தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கு நிந்தவூர் பொதுச் சுகாதார அலுவலகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு நடவடிக்கையாக அரச அலுவலகளில் கிருமி தொற்று நீக்கி மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பஸீர் தஸ்னிமா தலைமையில் நிந்தவூரில் அமைந்துள்ள அம்பாரை மாவட்ட தொழிற் பயிற்சி நிலையம், நிந்தவூரிலுள்ள தபால் நிலையங்கள், மின்சார அலுவலகம், தனியார் வைத்திய கிளினிக் நிலையங்கள் உட்பட பல இடங்களில் நேற்று கிருமி தொற்று நீக்கி மருந்து தெளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருப்பதாக நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதே வேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சூழலில் பொது மக்கள் சமூக இடைவிலகலை முறையாக பின்பற்றாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் மீனவர்களே இதில் அசமந்தமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறும், சமூக இடைவிலகலை பின்பற்றி நடக்குமாறும் மீனவர்களுக்கு நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்தியரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment