கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தப்பி வந்த 8 பேரையும், அவர்களை
சட்டத்துக்கு புறம்பாக ஏற்றி வந்த லொறி சாரதியையும் விடத்தல் பளை படைமுகாம்
தனிமைப்படுத்தல் நிலையத்தில் மே மாதம் 26ஆம் திகதிவரை வைத்து கண்காணிக்க
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்
யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
அவர்கள் தப்பி
வந்த லொறியில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பிலும் ஆராயப்பட உள்ளதோடு
சுகாதாரப் பிரிவினரால் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
இன்றைய
தினம் யாழ். வணிகர் கழகத்தினருடனும் சந்திப்பினை மேற்கொண்டு இனிமேல்
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறா வண்ணம் அனைத்து தரப்பினரும் ஒ

0 comments:
Post a Comment