கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இன்றைய
தினத்தில் இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரம் வரையிலான
காலப்பகுதி 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 335
ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு
தெரிவித்தது.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில்,11 பேர் ஏற்கனவே
தனிமைபப்டுத்தப்பட்ட பேருவளை - பன்வில பகுதியில் இருந்து மட்டக்களப்பு -
புனானை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தவர்களாவர்.
அத்துடன் ஏனைய இருவரில் ஒருவர் பொலன்னறுவை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ளமை உறுதியானது.
அத்துடன் 13 ஆவது தொற்றாளராக இன்று அடையாளம் காணப்பட்டவர் ஜா எல -
சுதுவெல்ல பகுதியில் இருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்துக்கு
அனுப்பப்பட்டிருந்த ஒருவராவார் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்
பிரிவு கூறியது.
இந்நிலையில் அதிக தொற்றாளர்கள் கொழும்பு மற்றும் களுத்துறை
மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில், 16 சுகாதார
மாவட்டங்களில் தொற்றாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று
நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந் நிலையில் மொத்தமாக இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 335
பேரில் 7 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும் மூவர் பூரண
குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர்.
அதன்படி இதுவரை 105 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளனர். இந் நிலையில்,
211 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு
வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார
வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின்
எண்ணிக்கை 147 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 31 வைத்தியசாலைகளில்
கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே
அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள்
தெரிவித்தன.
இன்று அடையாளம் காணப்பட்ட 13 பேரில் 12 பேர் மேல் மாகாணத்தை
சேர்ந்தவர்களாவர். அந்த தகவல்கள் பிரகாரம் மேல் மாகாணத்தில் அடையாளம்
காணப்பட்டோர் எண்ணிக்கை 204 ஆகும்.
இதில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின்
எண்ணிக்கை 115 ஆகும். அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 56
பேரும், புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும் இதுவரை
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16
ஆகும். கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில்
நல்வரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைவிட குருணாகல், மாத்தறை மற்றும் கல்முனை ஆகிய சுகாதார
மாவட்டங்களில் தலா இருவர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா,
பொலன்னறுவை மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இன்று இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 335
தொற்றாளர்களில், 3 வெளிநட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக
தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment