ஜனநாயகம் மரணிப்பதை தடுப்பதற்காக பழைய
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்
நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றம்
கலைக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கு முன் மீண்டும் நாடாளுமன்றத்தை
கூட்ட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அல்ல.
ஜனநாயகம் மரணிப்பதை தடுப்பதற்காகவே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்.
இதனால், அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்.
இதனை
விடுத்து பழைய நாடாளுமன்றத்தை கூட்டினாலும் கூட்டப்படாவிட்டாலும் மக்கள்
விடுதலை முன்னணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment