நாட்டின் சில பிரதேசங்களில் இன்று இரவு 200 மில்லிமீற்றர் மழை பெய்யும்
என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய
மாகாணங்களில் தற்போதைய வானிலை தொடரும்.
அதேநேரம் கிழக்கு, ஊவாக, வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில் மறு
அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாட்டை சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற
கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்
திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது
கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும்
அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் ஏற்படடுள்ள தாழமுக்கம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழமுக்கமாக மாறக்கூடும்.
இந்த
குறைந்த காற்றாழுத்த தாழமுக்கம் தெற்கு வங்க கடலில் புயலாக மாறலாம் எனவும்
அது எதிர்வரும் 17ம் திகதி வடமேற்கு திசை நோக்கியும் அதன் பின்னர் 18
மற்றும் 20ம் திகதிகளில் வடக்கிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு வங்க கடல்
நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மலைப்பாங்கான இடங்களில் வாழ்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00 மணி)
முல்லைத்தீவுக்கும் கற்கோவளத்துக்கும் இடையில் முல்லைத்தீவிலிருந்து வடக்கே
109 கி. மீ. தூரத்தில் காணப்படுகின்றது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 21.11.2018 இரவு அல்லது 22.11.2018 அதிகாலை இந்தியாவின் மகாபலிபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 22.11.2018 வரை மழை தொடரும். சிலவேளை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்தால் நாளை பிற்பகலுடன் மழை அற்றுப்போகலாம். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 40- 60 கி. மீ. வரை காணப்படலாம். கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். தொடர்மழை காரணமாக நவாந்துறை, பாசையூர், சாவற்காடு, பொம்மைவெளி, குருநகர் மற்றும் யாழ்.நகரை அண்மித்த கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படலாம். போதுமான முன்னேற்பாடுகள் அவசியமானவை.
– நா.பிரதீபராஜா-

0 comments:
Post a Comment