• Latest News

    May 16, 2020

    மக்கள் பீதியடையத் தேவையில்லை அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சற்று முன்னர் தெரிவிப்பு

    (முஹா - பாலமுனை)
    தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நாம் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரிடம் வினவியபோது, 

    இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் எனவும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.

    இது போன்ற நிலைமைகள் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டதாகவும் அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

    எனவே இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகள் அல்ல எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    எனவே மக்கள் வதந்திகளை பரப்பி அல்லது நம்பி இந்த செய்திகளை பரப்பாமல் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இது அபாய நிலைமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமான, உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. ரியாஸ் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்கள் பீதியடையத் தேவையில்லை அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சற்று முன்னர் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top