சஹாப்தீன் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் (அம்பாரை) மாவட்டத்தின் வேட்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹீரின் (அஸ்ரப்) சொந்த நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் - வாங்காமம் 11ஆம் கொலனியில் மக்களின் போக்குவரத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமப் பிரதேச அமைப்பாளர் எ.ஏஸ்.முனாஸ்
தலைமையில் பாதைப் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. இவருடன் இறக்காமம் 3ஆம்
வட்டார வேட்பாளர்களான ஏ.எல் மர்சுக், எஸ்.எல்.றஜா ஆகியோர் இணைந்து
செயற்பட்டமை குறிப்பிடதடதக்கது. இறக்காமம் 2ஆம் பிரிவு 11கொலனி வாங்காமம்
பள்ளிவாசல் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே பாதைகள் புனரமைப்பு
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக வாங்காமம் 11ஆம் கொலணி
மக்களின் வேண்டுகோளாக இருந்த இப்பாதைப் புனரமைப்பு வேலையை செய்து தந்த
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிருக்கு பள்ளிவாசல்
நிர்வாகமும், இப்பிரதேச மக்களும் இந்த வேலை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு
வழங்கிய நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம் அஷ்றப் தாஹிருக்கு நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறார்கள்.

0 comments:
Post a Comment