உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் நாட்டை பகுதியளவில் திறப்பதால் பாரிய
பிரச்சினை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளும் முடக்கல் நிலை தளர்த்தலும் ஒருங்கே இடம்பெறவேண்டும் என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாளொன்று 3000 பரிசோதனைகளாவது மேற்கொள்ளவேண்டும் என்று தாம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில்
உலக சுகாதார மையத்தின் அறிவுரையின்படி இலங்கையில் நாளொன்றுக்கு எத்தனை
கொரோன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அரசாங்கம் மக்களுக்கு
வெளிப்படுத்தவேண்டும்.
இது வெளிப்படையாக தெரிய வேண்டிய விடயம் என்றும்
அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு கிடைத்துள்ள கொரோன பரிசோதனை
தொடர்பான உபகரணங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளிப்படு;த்தவேண்டும்..
எதிர்காலத்தில் உபகரணங்களை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதா? என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவேண்டும்.
நடைமுறை
பொருளாதார பிரச்சினையை அரச பணியாளர்களின் வேதனத்தில் 50 வீதத்தை பெற்று
தீர்க்கமுடியாது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் லாபம் கருதி அரசாங்கத்துக்கு எதிராக
நடவடிக்கைகள் எதனையும் தமது கட்சி முன்னெடுக்காது என்றும் ரணில்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment