இலங்கைக்குள் இன்று 16 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக ஓரிருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து வந்தநிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 16 பேரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டுக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2918ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மேலும் 5 பேர் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 2765 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளில் 142பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

0 comments:
Post a Comment