• Latest News

    August 29, 2020

    மட்டு நகரை அதிர வைத்த வாள் வெட்டு குழு கைது

    மட்டக்களப்பில் இளைஞர் ஒருவரை படுகொலை செய்த வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

    பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் 15வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டிருந்தனர். இச் சம்பவத்தில் குறித்த சிறுவனின் உறவினர்கள் இருவரும் காயமடைந்தனர்.

    சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் 3பேரும், திங்கட்கிழமை 2பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்கள் 19 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிசார் குறிப்பிட்டனர். அத்துடன் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.'

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டு நகரை அதிர வைத்த வாள் வெட்டு குழு கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top