மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஓல் ரௌண்டரான டிவெயின் பிராவோ (Dwayne Bravo) இருபதுக்கு 20 போட்டிகளில், 500 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல், கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் பிக்பாஷ் (big bash) போன்ற உள்ளூர்த் தொடர்களிலும் பிராவோ விளையாடி வருகிறார்.
இந் நிலையில் தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் தொடரில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 500ஆவது விக்கெட்டை எடுத்துள்ளார்.
தனது 459ஆவது இருபதுக்கு 20 போட்டியில் பிராவோ இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

0 comments:
Post a Comment