மட்டக்களப்பு மாவட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி சிறைப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு
செங்கலடி பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால்
அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள்
திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்த அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவர்
அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக்
கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்த
அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபர், பிரதேச
செயலாளர், மற்றும் பொலீசார் உடன் வரவேண்டும் என கூறியுள்ளார். பின்னர் பொலீசார் வந்து பிக்குவுடன் சமாதானம் பேசி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.அம்பிட்டிய
சுமன ரத்தின தேரர் அடித்ததில் காயமடைந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்
மூன்று பேர் கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற கட்டளைக்கு அமைய தொல்பொருள் அடையாளங்கள் உள்ள பகுதிகளை தவிர ஏனைய வயல் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் செங்கலடி பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய வயல் காணிகளை விவசாயிகளிடம் மட்டக்களப்பு தொல்பொருள் திணைக்களம் ஒப்படைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் சம்பவ இடத்திற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து தாக்கியதுடன் அவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.
பொண்ணம்பலம் மதன்(32),தர்மராஜா ஜெசிதரன்(36), அம்பாறை தொல்பொருள் திணைக்கள அதிகாரி லால் கேமந்த ஜெயலத்(36) என்ற மூன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவர்களின் தாக்குதல் காரணமாக மட்டக்களப்பு கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.




0 comments:
Post a Comment