• Latest News

    September 21, 2020

    சமாதான நீதவான்

    நிந்தவூரைச் சேர்ந்த ஆசிரியர் Sherifu mohamedaniffa (SLTS - 1) கல்முனை நீதி, நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவானாக (2020.09.10) கல்முனை மாவட்ட நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றஸாக் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

    இவர் இப்றாலெப்பை சரிவு (அலி றைவர்) முஹம்மதலியார் ஆசியா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராவார். 

    இவர் தமது ஆரம்பக் கல்வி நிந்தவூர் கமுஃ கஸ்ஸாலி வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை நிந்தவூர் கமு/ அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையிலும் மேற்கொண்டார்.

    இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் B.Sc (ACC & Fin) பட்டதாரியான இவர் நிந்தவூர் கமு/ அல் - மதீனா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.

    இவர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமாவினை (PGDE) பூர்த்தி செய்துள்ளார். அத்தோடு இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டமானிக் கற்கையின் (LLB) இரண்டாம் வருட மாணவருமாவார்.

    இவர் கல்விதுறையில் மட்டுமன்றி விளையாட்டு, மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களிலும், சமூக சேவைகளிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமாதான நீதவான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top