• Latest News

    September 04, 2020

    சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அதிரடியான தடை: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை ஸ்தம்பிக்கச் செய்யுமா?

    சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை இலங்கையில் தற்போது பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் புதிய தடை மூலம் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீன கொம்யூனிக்கேஷன் கன்ஷ்ரக்‌ஷன் கம்பனிதான் China Communications Construction Company (CCCC) கொழும்பு துறைமுக நகர திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதால்தான் இந்த அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது.

    செயற்கையான தீவுகளை உருவாக்குவதில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 157 நாடுகளில் 929 திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாகத்தான் சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டமும் உள்ளது.

    கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீனவிடம் கொடுப்பதைத் தடுப்பதற்காக மேற்கு நாடுகளும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை ஏற்கனவே பூர்த்தி செய்திருந்த சீனா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் தென்பகுதியை தன்னுடைய கண்காணிப்புக்குள் கொண்டுவந்திருந்தது.

    இதன் அடுத்த கட்டமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீன தற்போது முன்னெடுத்துவரும் நிலையில்தான் அமெரிக்காவின் புதிய தடை அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    24 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தற்போது தடை விதித்திருக்கும் பின்னணியில் தற்போது நிலைமைகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் குறிப்பிட்ட சீன நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியான தொடர்புகளை வைத்திருக்கக் கூடாது என்பதுதான் இந்த தடையின் அர்த்தம்.

    கொழும்பு துறைமுக நகர திட்டத்தைப் பொறுத்தவரையில் அதில் சம்பந்தப்பட்டுள்ள சீன நிறுவனங்களில் உப ஒப்பந்தகாரர்களாக அல்லது கட்டுமாணங்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பவர்களாக அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு விஷேடமான விதிவிலக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அதிரடியான தடை: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை ஸ்தம்பிக்கச் செய்யுமா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top