• Latest News

    September 04, 2020

    கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஊழியர் ஒருவர் பலி; தீயைக் கட்டுப்படுத்த இலங்கை, இந்தியப் படைகள் தொடர்ந்து முயற்சி – பிந்திய காணொளி இணைப்பு

    தீப்பற்றி எரியும் “MT NEW DIAMOND” என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதேவேளை, கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, துறைமுக அதிகார சபை, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சங்கமன்கண்டி கடற்பரப்பில் 38 மைல் தொலைவில் இருந்த எரிபொருள் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஊழியர் ஒருவர் பலி; தீயைக் கட்டுப்படுத்த இலங்கை, இந்தியப் படைகள் தொடர்ந்து முயற்சி – பிந்திய காணொளி இணைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top