• Latest News

    September 29, 2020

    கல்முனை/நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் முன் நுளைவாயில் சுவர்- விரைவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

    நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் முன் நுளைவாயில் சுவர் புதிதாக அமைக்கப்படுவதற்காக கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளரின் பெறுகை குழு தலைவரினால் 05.08.2019 அன்று விலை மனு கோரப்பட்டு அதற்கான கொந்தராத்தானது 3 மாதத்தினுள் பூர்த்தி செய்யப்படும்படியா வழங்கப்பட்டிருந்தது.

    இருப்பினும், குறித்த நுளைவாயில் சுவரானது ஒரு வருட காலமாகியும் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டுவருகின்றது.

    இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளரோ, அவரது பெறுகை குழு தலைவரோ, கல்முனை வலய கல்வி பணிப்பாளரோ, கலமுனை வலய கல்வி பணிமனை பொறியியலாளரோ, பாடசாலை அதிபரோ, பாடசாலை அபிவிருத்தி சங்கமோ முறையான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. இதனால் பாடசாலையின் முன் நுளைவாயில் கட்டுமானமானது தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது.

    இதனால், அல் அஷ்ரக் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நாளாந்தம் பல்வேறு வகையான பொதுத் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

    இவ்விடயமானது இன்றைய தினம் பாடசாலை பழைய மாணவர்களான சட்டத்தரணிகளது சங்கத்தின் கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, இந்நிலை தொடர்பில் நீதிமன்றில் விரைவில் வழக்கொன்றை மேற்குறித்த நபர்களுக்கு எதிராக பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    வழக்கு தாக்கல் செய்வதில் பங்கெடுக்க ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவ சட்டத்தரணிகள் சங்கத்தினை தொடர்பு கொள்ளவும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை/நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் முன் நுளைவாயில் சுவர்- விரைவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top