• Latest News

    September 28, 2020

    நிந்தவூரில் வீதி ஓரங்களில் மீன்கள் விற்பதற்கு தடை

    நிந்தவூர் பிரதேசத்தில் மீனவர்கள் தெரு ஓரங்களிலும், வேறு இடங்களிலும் மீன் வியாபாரம் செய்வதனால் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் எற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றி பல தடவைகள் மேற்படி இடங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களை அறிவுறுத்திய போதிலும் தொடர்ந்தும் வீதி ஓரங்களிலும் வேறு இடங்களிலும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    இந்நிலையில் இன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில்  வீதி ஓரங்களிலும் வேறு இடங்களிலும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், மீன் வியாபாரிகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

    இதன்போது எக்காரணம் கொண்டும்  வீதி ஓரங்களிலும் வேறு இடங்களிலும் மீன் வியாபாரத்தில் ஈடுபடக் கூமாதென்று வலியுறுத்தப்பட்டது.  அத்தோடு பொதுச் சந்தையில்தான் மீன் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதனை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் முடிவு செய்யப்ப்பட்டது.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் வீதி ஓரங்களில் மீன்கள் விற்பதற்கு தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top