• Latest News

    September 28, 2020

    நிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை, பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை

     நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக இன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

    இதன் போது வடிகான்களை துப்பரவு செய்வது பற்றியும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

    டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு நிந்தவூர் பிரதேச சபையும், பொதுச் சுகாதார பணிமனையும் கூட்டாகச் செயற்படுவதற்கு  முடிவு செய்யப்பட்டது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை, பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top