• Latest News

    September 12, 2020

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து.!!

     Greece நாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர
    தீ விபத்து ஏற்பட்டது இதனால் 13,000 பேர் தங்குமிடத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    உள்நாட்டுப்போர்,பயங்கரவாதம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர் குறிப்பாக Syria,Libya,Afghanistan,Myanmar,Africaவை சேர்ந்த
    பல நாட்டு மக்கள் அகதிகளாக உள்ளனர்.
     
    இவர்கள் வேலைவாய்ப்பு,தங்குமிடம், பொருளாதாரம்,வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்க்ளுக்காக Europeநாடுகளுக்குள் சட்டவிரோதமாக கடல் மற்றும் நிலப்பரப்பு வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்.
     
    இவர்களை Europe நாடுகள் தங்கள்நாட்டின் எல்லையிலேயே பிடித்து முகாம்களில் தங்கவைத்துள்ளனர் மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து அகதிகள் வெளியே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் இதற்கிடையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் குடியிருப்பு Greece நாட்டில் உள்ளது Greece நாட்டின் Lesbos தீவின்Moria நகரில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதியில் 13,000 ஆயிரம் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
     
    அந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது
    இந்த அகதிகள் குடியிருப்பில் உள்ளவர்களில் 70% பேர் Afghanistan
    நாட்டை சேர்ந்தவர்கள். 
     
    அகதிகளுக்கும் Greece பாதுகாப்பு படையினருக்கும் நேற்று திடீரென
    மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதேபோல் அகதிகள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் வசித்து வரும் Greece நாட்டு மக்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதியில் இருப்பதை விரும்பவில்லை எனவும் அவர்கள் தான் குடியிருப்புக்கு தீ வைத்துள்ளனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன ஆனால் குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான உண்மையான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை இந்த
    தீ விபத்தால் அகதிகள் குடியிருப்புகள் முழுவதும் தீக்கிரையாகி முற்றிலும் அழிந்து விட்டது இந்த தீயை அணைக்கவந்த தீயணைப்பு படையினரை அகதிகள் சிலர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
     
    தீ விபத்தால் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13,000 பேர் தங்கள் குடியிருப்பை இழந்துள்ளனர் அவர்கள் Moria நகர சாலைகளில் தஞ்சமடைந் துள்ளனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மேலும் Moria நகரில் இருந்து அகதிகள் யாரும் வெளியே செல்லாத அளவிற்கு நகரின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன.
     
    இந்த சம்பவத்தை தொடர்ந்து அகதிகளுக் கான தற்காலிக முகாம்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது...






     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து.!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top