• Latest News

    October 06, 2020

    ஊரடங்குச் சட்டத்தை மீறிய 51 பேர் கைது

     தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 51 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    மினுவங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொடை பிரதேசங்களில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விடயத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

    தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகளுக்கு அமைய இந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறித்த பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊரடங்குச் சட்டத்தை மீறிய 51 பேர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top