மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,
ஏற்பட்டுள்ள நிலைமை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒன்றுக்குகூடும் நிகழ்வுகளை
நடத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், கலந்துரையாடல்கள், விரிவுரைகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், நினைவு தின நிகழ்வுகள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் மற்றும் அத்தியவசியமற்ற கூட்டங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நடத்தக் கூடாது.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு அமைய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாத்திரம் 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment