• Latest News

    November 17, 2020

    கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,831. மரணமடைந்தவர்கள் 61 பேர். குணமடைந்தோர் 12,210 பேர்

    நாட்டில் இன்று (17-11-2020) மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

    இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,831. உயர்வடைந்துள்ளதுடன்  5,560 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்றையதினம் நாட்டில் மேலும் 404 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 12,210 பேர் குணமடைந்துள்ளனர்.

    இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 516 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  61 ஆக உயர்வடைந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,831. மரணமடைந்தவர்கள் 61 பேர். குணமடைந்தோர் 12,210 பேர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top