கொரோனா காரணமாக இறக்கும் முஸ்லிம் மக்களை அடக்கம் செய்ய தலைமன்னார் பெருத்தமான இடம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள நிலைப்பாடுகளை ஆராய்ந்த போது, உடல்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் என தலைமன்னார் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை தகனம் செய்யாது, அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை கொழும்புக்கு அருகில் உள்ள முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம் செய்யலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானவர்கள் அதற்கு எதிர்ப்பை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment