• Latest News

    November 13, 2020

    ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக வெள்ளை மாளிகையை தயார் செய்து வருகிறார்!

    அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று வெளியிட்டிருந்த கருத்து காரணமாக பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    “ ட்ரம்பின் இரண்டாவது நிர்வாக காலத்திற்காக வெள்ளை மாளிகை மென்மையான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது” என பொம்பியோ கூறிருந்தார்.

    அவரது இந்த கருத்தானது ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை பொம்பியோ ஏற்கவில்லை என்ற அர்த்தத்தை கொடுத்துள்ளது.

    இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஜோ பைடன் சத்திய பிரமாணம் செய்யும் வைபவம் தொடர்பிலும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் முறைகேடானது எனக் கூறி, டொனால்ட் ட்ரம்ப தாக்கல் செய்துள்ள பல வழக்குகளை விசாரணைக்கு எடுக்காது நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். ட்ரம்பின் சட்டத்தரணி இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல தயங்குவதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனடிப்படையில் இல்லாத வழக்கை எப்படி தாக்கல் செய்ய முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜேர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் ரசிகர் என வர்ணிக்கப்படும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பைடனுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    எனினும் அனைத்து வாழ்த்துச் செய்திகளும் பைடனுக்கு தொலைபேசி வழியாகவே கிடைத்துள்ளன.

    வெள்ளை மாளிகையின் சம்பிரதாயங்களுக்கு அமைய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஊடாகவே அவை பைடனுக்கு கிடைக்க வேண்டும். எனினும் ராஜாங்க திணைக்களம் பைடனுக்கு கிடைக்கும் வாழ்த்துச் செய்திகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக மொழிப்பெயர்ப்பாளர்களின் உதவியின்றி கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற வாழ்த்துச் செய்திகள் மாத்திரமே பைடனுக்கு கிடைத்து வருகிறது. பைடனின் அணியினர் வெளிநாட்டு தலைவர்களுடன் கொண்ட தனிப்பட்ட தொடர்பு வலையமைப்பு ஊடாகவே இந்த வாழ்த்துச் செய்திகள் கிடைக்கின்றன.

    அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு டசின் கணக்கில் வாழ்த்துச் செய்திகள் கிடைத்துள்ளதாக சீ.என்.என் செய்தி சேவை இன்று தெரிவித்துள்ளது.

    கிடைத்துள்ள வாழ்த்துச் செய்திகள் எதனையும் உத்தியோகபூர்வமாக பைடனுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் அந்த செய்தி சேவை கூறியுள்ளது.

    பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உலக தலைவர் அவற்றை ராஜாங்க திணைக்களத்தின் வளங்கள் ஊடாக உத்தியோகபூர்வமாக அவருக்கு வழங்க முயற்சித்து வருகின்றனர்.

    எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், தனது போட்டியாளருக்கு கிடைக்கும் வாழ்த்துச் செய்திகளுக்கும் இடையூறு செய்து வருகிறார். இது அமெரிக்க வரலாற்றில் என்றுமே நடக்காத அதிகார வெறியை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக வெள்ளை மாளிகையை தயார் செய்து வருகிறார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top