• Latest News

    November 13, 2020

    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பெண்ணை முக்கிய பதவிக்கு நியமிக்க முடிவெடுத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி?

    அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சுசன் ரைஸ் நியமிக்கப்பட உள்ளார்.

    சுசன் ரைஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர் எனவும் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர் எனவும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனையை கொண்டு திட்டமிட்டவர் எனவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

    சுசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

    இதனையடுத்து சுசன் ரைஸ் குறித்த மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

    அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார், அதன் பின் இந்த நியமனங்கள் உடன் நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் முன்னர் அழுத்தமாக ஒபாமாவின் பதவிக் காலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இவர் முன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பெண்ணை முக்கிய பதவிக்கு நியமிக்க முடிவெடுத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top