• Latest News

    December 21, 2020

    ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

    எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top