• Latest News

    December 21, 2020

    கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஜனவரியில் அதிகரிக்கும் - சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

    கொரோனா வைரசால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 2021 ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இலங்கையில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

    ஜனவரி மாதத்தில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அத்துடன், இறப்புக்களும் அதிகரிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

    எனவே வீடுகளில் உள்ள முதியோர்களை உரியமுறையில் கவனித்துக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

    சமூகத்தில் முதியோர்களே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமையை ஹரித்த அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதேவேளை நந்தார், மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் எல்லை கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.

    அடுத்த சில நாட்களில் மேல் மாகாணத்தில் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

    அதேநேரம் மேல் மாகாணத்தில் பி.சி.ஆர் மற்றும் என்டிஜென் பரிசோதனையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஜனவரியில் அதிகரிக்கும் - சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top