• Latest News

    January 08, 2021

    தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி - கல்வி அமைச்சு

    எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

    கொவிட் நோய்த் தொற்று பரம்பல் காரணமாக தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி மேல் மாகாணத்தில் தரம் 11 இற்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி - கல்வி அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top