• Latest News

    January 08, 2021

    க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

    செயல்முறை பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் அனுமதி பத்திரத்திற்காக பரீட்சை திணைக்களத்திற்கு வருகைத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே தனிமைப்படுத்தல் மற்றும் பயண கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்கள், பரீட்சை எழுதும் போது தேசிய அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

    மேலதிக தகவல் அவசியம் என்றால் 0112 784 208, 0112 784 537, 0113 188 350 அல்லது 1911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top