அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை இன்று இரவு கொழும்பில் கூட இருக்கின்றது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தலைமையில் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இக்கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, இன்றிரவு முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் கூட இருப்பதாகவும் தெரிய வருகின்றது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாமென்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment