• Latest News

    August 03, 2021

    ஒலிம்பிக் போட்டிகள் : கத்தார் வீரரின் செயலைப் பாராட்டி உலகளவில் வாழ்த்துக் குவிந்து கொண்டிருக்கின்றன.

     

    இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி இறுதிப் போட்டியில் கட்டாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிமை எதிர்  கொண்டார். இருவரும் 2.37 மீட்டர் தாவி சம நிலையில் இருந்தனர்! ஒலிம்பிக் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் இன்னும் மூன்று முயற்சிகள் கொடுத்தனர், ஆனால் அவர்களால் 2.37 மீட்டருக்கு மேல் உயரம் பாய முடியவில்லை.

    இருவருக்கும் மேலும் ஒரு முயற்சி கொடுக்கப்பட்டது, ஆனால் காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இத்தாலியின் தம்பேரி கடைசி முயற்சியிலிருந்து விலகினார். பார்ஷிமுக்கு முன்னால் வேறு போட்டியாளர் இல்லாத தருணம், அவர் தனியாக தங்கத்தை எளிதாக வென்ற தருணம்!

    கட்டாரின் பார்சிம் அதிகாரியிடம் "இறுதி முயற்சியிலிருந்து நானும் விலகினால் தங்கத்தை எங்கள் இருவருக்கும் பகிர முடியுமா?" என வினவ, அதிகாரி சரிபார்த்து உறுதிசெய்து, "ஆம், தங்கம் உங்கள் இருவருக்கும் இடையில் பகிரப்படும்" என்று கூறினார். பார்சிம் பின்னர் யோசிக்க ஒன்றுமில்லை, கடைசி முயற்சியிலிருந்து தானும் விலகுவதாக அறிவித்தார்.

    இதைப் பார்த்த இத்தாலிய போட்டியாளர் தம்பேரி ஓடி வந்து பார்ஷிமை கட்டிப்பிடித்து அலறினார்!

    அங்கு நாம் பார்த்தது நம் இதயங்களைத் தொடும் விளையாட்டுகளில் இருக்கின்ற அன்பின் பெரும் பங்கு. இது மதங்கள், வண்ணங்கள் மற்றும் எல்லைகளை பொருத்தமற்றதாக ஆக்கும் விவரிக்க முடியாத விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துகிறது.

    109 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தடகளத்தில் பகிரப்பட்டது, உயரம் தாண்டுபவர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் மற்றும் இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி இருவரும் சாம்பியன்களாகத் தேர்வு செய்தனர்.

    இவரது இந்த நல் எண்ணத்தை அவதானித்த உலகத்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். விளையாட்டின் மூலமாக இனம், மதம், நாடுகளைக் கடந்து மக்களிடையே நல்ல எண்ணங்களை விதைக்க முடியும் என்று கத்தார் வீரர் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் எடுத்துக் காட்டியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒலிம்பிக் போட்டிகள் : கத்தார் வீரரின் செயலைப் பாராட்டி உலகளவில் வாழ்த்துக் குவிந்து கொண்டிருக்கின்றன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top