• Latest News

    February 14, 2022

    ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்

     ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

    இன்று (14) அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

    வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    இனந்தெரியாத நான்கு நபர்கள் வாகனத்தில் வந்து தனது வீட்டில் இருந்த பாதுகாவலரை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். 

    தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. 

    பல தடவைகள் தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top