• Latest News

    April 03, 2023

    பிக்கு ஒருவரின் பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!

     திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

    குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.

    குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலர்  துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.

    புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிக்கு ஒருவரின் பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top