(சஹாப்)
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வறிய விவசாயக் குடும்பங்களுக்கு ரூபா 05 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 75 விவசா
யக் குடும்பங்கள் மேற்ப டிஉலர் உணவுப் பொதியைப் பெற்றுக் கொண்டனர்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கமலா அபிவிருத்தி ஆணையாளர் ஷாமினி சோமதாஸ, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சஞ்சீவ பிரசன்ன, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. அலிகான், எம்.எம்.அன்சார், ஏ. அஸ்பர் (ஜே.பி), ஐ.எல். சம்சுதீன், சமூக சேவகர் ஏ.பி.எம்..ஜெமீல், என்.எம். ரிஸ்மீர், டொக்டர் எம்.ரி. தௌபீக், ஏ.எம். காசிம், எச்.எம்.எம். சாஜித் உள்ளிட்டவர்கள் அதிதிகாகக்; கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
மேற்படி உலர் உணவுகள் நன்கொடையாளர்களின் நிதி வழங்கலின் மூலமாக வழங்கப்பட்டதாக நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment