நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளி வாசலுக்குரிய, பள்ளிவாசலின் தென்புறத்தில் உள்ள தரிசாகக் இருக்கும் காணியை வாகனங்கள் நிறுத்துவதற்குரிய இடமாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது வாகனங்களுக்கு வாடகை பணம் அறவீடு செய்ய முடியும். அதனால் பள்ளிவாசலுக்கு வருமானம் கிடைக்கும்.
மேலும், பிரதான வீதியை முன்னிலைப்படுத்தி கடைகளை அமைப்பதோடு, தங்குமிட விடுதிகளையும் அமைக்கலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடைத்தொகுதியை நவீன முறையில் அமைக்கும் போது பெரிய கம்பனிகள் அவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்ளும்.
இக்கோரிக்கைகளை முன் வைத்து நிந்தவூர் பிரதேச மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு நிந்தவூர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
.jpg)
0 comments:
Post a Comment