பாறுக் ஷிஹான் -
மாளிகைக்காடு பிரதேசத்தில் பலம்வாய்ந்த விளையாட்டுக் கழகமான றியல்
பவர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் தாணிஸ்
ரஹ்மத்துல்லா அவர்களின் தலைமையில் அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மேல்மாடியில்
நடைபெற்றது.
கலாச்சார உத்தியோகத்தர் கன்னியத்துக்குறிய அஷ்ஷேக் ஏ. தெளபீக்(நளீமி)
அவர்களின் மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மாளிகைக்காடு
அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் பைசர் ஹாஜியார்,
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மாஹிர்,
றியல் பவர் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் நாஸர், ஜனாஸா நலன்புரி
அமைப்பின் தலைவர் இம்தியாஸ், கழகத்தின் செயலாளர் சஜாத் மற்றும்
உறுப்பினர்கள், அஹுவர் ஆசிரியர், பைசர் ஆசிரியர், அமைப்புக்களின்
பிரதிநிதிகள், அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 comments:
Post a Comment