• Latest News

    June 09, 2023

    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழர்!

      சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்

    மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

    இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

    அதோடு அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top