• Latest News

    January 08, 2024

    அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5,000 ரூபாவை வழங்குவதற்கு தீர்மானம்

     அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.இதேவேளை, அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

    மேலும், நெருக்கடியான நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.இதேவேளை, இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்கத்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5,000 ரூபாவை வழங்குவதற்கு தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top