• Latest News

    March 05, 2024

    கிரிக்கெட் சுற்றுப் போட்டி! ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதி

     புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

    இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
    மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக், இணைப்பாளர் இர்ஷாட், மர்சூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.





     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிரிக்கெட் சுற்றுப் போட்டி! ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top