எஸ்.அக்தர்;
கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.ஐ.எம்.பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடித்தினை தேர்தல் ஆணையாளர் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் ஜுன் மாதம் 23ஆம் திகதி முதல் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பக் கால உறுப்பினராவார். மு.காவின் சாய்ந்தமருது அமைப்பாளராகவும், மத்திய குழுவின் தலைவராகவும், அதியுயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவர், கலாசார உத்தியோகத்தராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

0 comments:
Post a Comment