எறும்புகள், தாம் சேகரிக்கும் தானியங்கள், மற்றும் விதைகளை நீண்ட கால உணவுத் தேவைக்காக மண்ணுக்கடியில் பொந்துகளிள் மறைத்து வைக்கின்றன. இப்படி சேமிக்கப்படும் தானியங்கள் முளைத்து விடக்கூடாது என்பதற்காக, அவைகளை இரண்டாக உடைத்து பாதுகாத்து வைக்கும் இயல்பறிவை அவைகள் கொண்டுள்ளன.
ஆனால் அவைகள் கொத்தமல்லி விதைகளை மாத்திரம் நான்காக உடைத்து பிரித்து வைக்கின்றன என்பதை பூச்சியியல் விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இது பற்றி ஆய்வு செய்த அவர்கள், கொத்தமல்லி விதைகளை இரண்டு பாதியாக உடைத்து வைத்தால் கூட அவைகள் முளைக்கும் ஆற்றல் கொண்டவை என்பதை கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
வான்மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:
((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் நமதிறைவன் தான் என்று அவர்(மூஸா) கூறினார்.))
📖 அல்குர்ஆன்: 20 / 50

0 comments:
Post a Comment