• Latest News

    January 28, 2025

    இக்கட்டான சூழ்நிலையில் பாம்பு, மரப்பட்டை போன்றவற்றை சாப்பிட்டுதான் சீனா உலகில் முதலிடம் பெற்றுள்ளது -


    தேசிய மக்கள் சக்தி எத்தனையோ தடைகளைத் தாண்டி தற்போது மலையடிவாரத்துக்கு வந்து நிற்கிறது, முன்னால் உள்ள மலையில் ஏறும் வேளையில் பல சவால்கள் ஏற்படும் , எல்லாவற்றையும் இலகுவாக செய்ய முடியாது, பல தியாகங்கள்செய்ய வேண்டியிருக்கும். என கே. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

    அன்று இக்கட்டான சூழ்நிலையில் பாம்பு, மரப்பட்டை போன்றவற்றை சாப்பிட்டு தான் சீனா  இன்று உலகில் முதலிடம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டு மக்கள் மாத்திரமன்றி ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முதல் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைவரும் அதே மட்டத்தில் அவதிப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாக தான் கொழும்பில் தங்குவதற்கு இடமில்லாமல், பையை தோளில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்து வருவதாக கூறினார்.

    மாதிவெலயில் தற்போது வசிப்பிடமொன்று கிடைத்துள்ளதாகவும், வாகனம்  இன்னும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், பழைய வாகனங்களை விற்று பொருத்தமான வாகனம் வழங்கப்படும் வரை பொறுமையாக இருக்கிறோம் என்றும் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இக்கட்டான சூழ்நிலையில் பாம்பு, மரப்பட்டை போன்றவற்றை சாப்பிட்டுதான் சீனா உலகில் முதலிடம் பெற்றுள்ளது - Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top