உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள பொதுபலசேனாவின் ஞானசார தேரர் இந்த விபரங்களை ஜனாதிபதியிடமும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த விபரங்களை ஊடகங்களை தெரிவிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
நான் இதனை பொறுப்புணர்வுடன் தெரிவிக்கின்றேன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ள ஞானசார தேரர், சூத்திரதாரி யார் அவரின் குணாதிசயங்கள் அவர் எப்படி ஜஹ்ரானை பயிற்றுவித்தார், எப்படி தற்கொலை தாக்குதலை நோக்கி வழிநடத்தினார் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நான் பல விடயங்களை தெரிவித்தேன், அதற்காக என்னை இனவாதி என தெரிவித்தார்கள், சிறையில் அடைத்தார்கள் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
March 07, 2025
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment