டி20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முதலாவது போட்டி கொழும்பு எஸ்.எஸ்..சி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தானும், நெதர்லாந்து அணியும் போட்டியிட்டன.
நாணயச் சுழற்றியில்
பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனால் நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
147 ஓட்டங்களை நெதர்லாந்து அணி பெற்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 148 ஓட்டங்கள் வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்தை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரிலேயே 24 ரன்களை விளாசினார் ஃபஹீம். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்து வென்றனர்.

0 comments:
Post a Comment