மஹியங்கனை நகரிலுள்ள அறபா ஜும்ஆப்
பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை (19.07.2013) மூடப்பட்டு இன்றைய தினம் அங்கு ஜும்ஆத் தொழுகையும்
இடம்பெறவில்லை. ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதான கமகேயின்
பணிப்பின்பேரிலேயே குறிப்பிட்ட
பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. பொதுபலசேனா மஹியங்கனை
நகரில் நடத்தவுள்ள ஒன்றுகூடல் காரணமாகவே குறித்த பள்ளிவாசல் மாகாண
அமைச்சரினால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதான
கமகே மஹியங்கனையில் குறித்த பள்ளிவாசலை அமைப்பதற்கு ஆரம்பகாலங்களில்
உதவிசெய்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
அண்மையில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீண்டும் அங்கு அசம்பாவிதங்கள்
ஏதும் நடக்காமல்சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான அனைத்து
முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதேச அரசியல்
வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மஹியங்கனை பள்ளிவாசல்
நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பெளத்த கடும்போக்குவாதிகள் இன
முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் மஸ்ஜித்துகளுக்கு முன்னாள் நடாத்தும்
ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் பொலிசார்
அமைதிபூர்வமான முறையில் பல சதாப்தங்களாக நடைபெற்று வரும் மஸ்ஜித் வணக்க
வழிபாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க தவறி வருமின்றமை முஸ்லிம்கள் மத்தியில்
அவநம்பிக்கையின் ஏற்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. நாட்டில்
பெளத்த கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலினால் நிறுத்தப்பட்டுள்ள
இரண்டாவது ஜும்ஆ இது என்பது குறிப்பிடத்தக்

0 comments:
Post a Comment