• Latest News

    April 22, 2026

    2.5 மில்லியன் டொலர் திறைசேரியிலிருந்து காணாமல் போயுள்ளது


    நாட்டின் திறைசேரியிலிருந்து இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

    இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை ஒன்றை உள்ளார்.

    அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் அல்லது 25 லட்சம் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் வெளிநாட்டு கடன் செலுத்துகை ஒன்றை மேற்கொண்ட போது ஏற்பட்ட தவறினால் இந்த பணம் காணாமல் போய் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை ஒன்றின் தவணை கட்டணத்தை செலுத்தும் போது உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ளாது இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஹேக்கர் ஒருவரின் கைகளுக்கு இந்த பணம் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

    போலி தகவல்களை வழங்கி குறித்த ஹக்கர் அரசாங்க பணத்தை கொள்ளையடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, இந்த பணம் காணாமல் போன விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் வேறு எந்தவொரு தரப்போ அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2.5 மில்லியன் டொலர் திறைசேரியிலிருந்து காணாமல் போயுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top