• Latest News

    August 22, 2013

    13ம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் வலியுறுத்தல்


    GL-salmanஇலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து சர்வதேச அரசியல், வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய நலன் ஆகியற்றை கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
    தமிழர்களை கொன்று குவித்து மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டதாகவும் ராஜா குற்றம்சாட்டினார். மேலும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில முதல்வர்கள் கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். இந்த கடிதங்களை மத்திய அரசு பரிசீலிக்கிறதா என்று ராஜா கேள்வி எழுப்பினார்.
    இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணைஅமைச்சர் பிரனீத் கவுர் காமென்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்களை மத்தியஅர-சு கவனத்தில் கொள்ளும் என்று பதலளித்தார்.
    இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ அரசியல் சாசனம் 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த அந்த நாட்டை இந்தியா வலியுறுத்தமா என்று பாஜக உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.
    இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், 13வது சட்டப்பிரிவை அமல்படுத்தி தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதிபடுத்த வேண்டுமென்று இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 13ம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top