கொழும்பில் நடக்கவுள்ள காமன்வெல்த் தலைவர்களின்
மாநாட்டில் எந்த மட்டத்தில் பங்கேற்பது என்பது குறித்து இன்னும் முடிவு
செய்யப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின்
தலைவர்களின் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது
என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களும் பல்வேறு கட்சித்
தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சனை குறித்து இன்று
நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான்
குர்ஷித், இது குறித்து அரசு எவ்வித முடிவையும் இன்னும் எடுக்கவில்லை
என்றார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட
13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற இந்தியா உறுதியோடு இருப்பதாகவும்
குர்ஷித் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment