• Latest News

    August 14, 2013

    மும்பையில் சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் வெடிவிபத்து; 18 ஊழியர்கள் பலி - கடற்படை

                                                                                மும்பை -
    மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று அதிகாலையில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை அடுத்து கப்பல் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கப்பலில் இருந்த 18 பேரது நிலை குறித்து தெரிய வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    தற்போது இந்த சம்பவம் குறித்து மும்பையில் கடற்படை தளபதி டி.கே. ஷோஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஷோஜி, தீ விபத்தில் 18 ஊழியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் தான் சிந்துரக்ஷக் நீர்முழ்கி கப்பலில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்டது குறித்த தெளிவான விளக்கம் தற்போது இல்லை. கப்பலில் இரண்டு முறை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ பரவியுள்ளது. வெடிவிபத்தினால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீர் புகுந்துள்ளதால் கப்பல் கடலில் தரை தட்டி நிற்கிறது என்று கூறினார்.

    மேலும், கப்பலில் உள்ள கப்பலின் பிரதான தாழ்ப்பாக்களை நீர்மூழ்கி கப்பல் வீரர்கள் திறந்து விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறுகிறது. தண்ணீர் வெளியேறிய பின்னரே விபத்துக்கான தகவல் தெரியவரும். நல்லதே நடக்கும் என நம்புகிறோம். மோசமான தகவலையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் என்று கூறியுள்ளார். 58 பேர் இருக்க ஆற்றல் கொண்ட கப்பலில் சம்பவம் நடைபெற்ற போது 18 பேர் இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    தற்போது இந்த சம்பவம் குறித்து மும்பையில் கடற்படை தளபதி டி.கே. ஷோஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஷோஜி, தீ விபத்தில் 18 ஊழியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் தான் சிந்துரக்ஷக் நீர்முழ்கி கப்பலில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்டது குறித்த தெளிவான விளக்கம் தற்போது இல்லை. கப்பலில் இரண்டு முறை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ பரவியுள்ளது. வெடிவிபத்தினால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீர் புகுந்துள்ளதால் கப்பல் கடலில் தரை தட்டி நிற்கிறது என்று கூறினார்.

    மேலும், கப்பலில் உள்ள கப்பலின் பிரதான தாழ்ப்பாக்களை நீர்மூழ்கி கப்பல் வீரர்கள் திறந்து விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறுகிறது. தண்ணீர் வெளியேறிய பின்னரே விபத்துக்கான தகவல் தெரியவரும். நல்லதே நடக்கும் என நம்புகிறோம். மோசமான தகவலையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் என்று கூறியுள்ளார். 58 பேர் இருக்க ஆற்றல் கொண்ட கப்பலில் சம்பவம் நடைபெற்ற போது 18 பேர் இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மும்பையில் சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் வெடிவிபத்து; 18 ஊழியர்கள் பலி - கடற்படை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top